Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்செக்ஸ் 352 புள்ளிகள் வீழ்ச்சி

சென்செக்ஸ் 352 புள்ளிகள் வீழ்ச்சி

முன்னணி குறியீடுகள் சரிந்தபோதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்.

பகிரவும் WhatsApp Facebook

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் விற்பனை அதிகரித்ததால், இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று சரிவுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 352.64 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. நிஃப்டி 22,700 புள்ளிகளுக்குக் கீழே முடிவடைந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவை முன்னிட்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதும் சந்தைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தின.

மும்பை பங்குச் சந்தையின் 30 முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ், நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சரிவைச் சந்தித்தது. காலை நேர வர்த்தகத்தில் சுமார் 995 புள்ளிகள் வீழ்ந்து, குறைந்தபட்ச அளவான 72,603.57 புள்ளிகளைத் தொட்டது. பின்னர் இழப்பின் ஒரு பகுதியை மீட்டாலும், வர்த்தக முடிவில் 352.64 புள்ளிகள் (0.48 சதவீதம்) குறைந்து 73,246.03 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையின் 50 முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நிஃப்டி குறியீடு 50.90 புள்ளிகள் (0.22 சதவீதம்) சரிந்து 22,698.85 புள்ளிகளில் நிறைவடைந்தது.

முன்னணி குறியீடுகள் சரிந்தபோதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் பிஎஸ்இ ஸ்மால்கேப் செலக்ட் குறியீடு 0.85 சதவீதமும், மிட்கேப் செலக்ட் குறியீடு 0.66 சதவீதமும் உயர்ந்தன.

இதனிடையே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆதரவுடன் செயல்படும் டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், பங்குச் சந்தையில் புதன்கிழமை சிறப்பான அறிமுகத்தைப் பதிவு செய்தது. அதன் பங்கு, வெளியீட்டு விலையான ரூ.1,119-ஐவிட ஏறத்தாழ 27 சதவீதம் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.

சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு 3.46 சதவீதமும், இன்ஃபோசிஸ் 3.34 சதவீதமும் சரிந்தன. டெக் மகிந்திரா 1.83 சதவீதம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 1.68 சதவீதம், பார்தி ஏர்டெல் 1.42 சதவீதம், டாடா ஸ்டீல் 1.37 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.

மாறாக, லார்சன் அண்ட் டூப்ரோ பங்கு ஏறத்தாழ 4 சதவீதம் உயர்ந்தது. டிரென்ட், பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, இண்டர்குளோப் ஏவியேஷன் ஆகியவற்றின் பங்குகளும் ஆதாயம் பெற்றன.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.99 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 114.5 அமெரிக்க டாலராக இருந்தது.

சவூதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களைத் தொடர்ந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற கவலை மீண்டும் எழுந்ததாக ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் வினோத் நாயர் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை உயர்வும், ஐடி பங்குகளில் ஏற்பட்ட விற்பனையும் முதலீட்டாளர் மனநிலையைப் பாதித்ததாக அவர் கூறினார்.

டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 101 டாலருக்கு மேல் நீடிப்பது பொருளாதாரம் குறித்த கவலையை அதிகரித்துள்ளதாக என்ரிச் மணி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொன்முடி தெரிவித்தார்.

முந்தைய செய்தி
ஓலா எலெக்ட்ரிக் உள்ளிட்ட 10 பங்குகள் 20% உயர்வு
அடுத்த செய்தி
13% உயர்ந்தது அனந்த் ராஜ் நிகர லாபம்

தொடர்புடைய செய்திகள்